ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக

ஹேமந்த் சோரனுக்கு எதிராக பர்ஹைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கம்லியேல் ஹெம்ப்ரோம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-10-28 06:59 GMT

ராஞ்சி,

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலை சந்திக்கின்றன. மற்றொரு புறம், பாஜக, ஏ.ஜே.எஸ்.யூ., ஐ.ஜ.த., எல்.ஜே.பி., ஓரணியாக தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் பாஜக 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், பாஜக தனது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு எதிராக பர்ஹைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கம்லியேல் ஹெம்ப்ரோம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஹெம்ப்ரோம் 2019 இல் ஏ.ஜே.எஸ்.யூ. கட்சி சார்பில் பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்டு 2,573 வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பாஜக 66 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை கடந்த 19ம் தேதி வெளியிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்