ஸ்ரீநகர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடக்கிறது. கடந்த 18-ந் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்தது. 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 25-ந் தேதி 26 தொகுதிகளில் 2-வதுகட்ட தேர்தல் நடந்தது. 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின.இந்நிலையில், 40 சட்டசபை தொகுதிகளில் இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.