சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது

கடந்த 3 மாதங்களில் டெல்லியில் ரூ.25 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-12-01 17:00 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக கிரிப்டோ கரன்சி, டார்க் வெப் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் சர்வதேச கடத்தல் கும்பல்கள் இதில் ஈடுபடுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. எனவே இதனை கட்டுப்படுத்த போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 3 மாதங்களில் 48 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.25 கோடி ஆகும். இதனையடுத்து சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட லோகேஷ் திங்ராவை டெல்லி போலீசார் குருகிராமில் வைத்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்