ஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்புக்கு தடை - மத்திய அரசு அறிவிப்பு

ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2024-10-10 14:06 GMT

புதுடெல்லி,

ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி இதனை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அறிவித்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதத்தை பரப்பியதும் தெரியவந்ததால் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்புக்கு  மத்திய உள்துறை தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் வலைதளத்தில் , "ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளது, பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதில் இந்த அமைப்பு ஈடுபட்டது. இந்த அமைப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி நாட்டை பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பல உலக நாடுகள் தடை செய்திருந்த நிலையில் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 10 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தநிலையில் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags:    

மேலும் செய்திகள்