பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 - ஹேமந்த் சோரன் அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது.

Update: 2024-11-29 02:42 GMT

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஹேமந்த் சோரன் அரசு வழங்கி வந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஹேமந்த் சோரன் மீண்டு முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்றார். பதவி ஏற்புக்கு பின்னர் ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் கூறுகயைில், ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் (டிசம்பர்) பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகையாக வழங்கப்படும் என்றார். பின்னர் இது தொடர்பான முடிவு மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

49 வயதான ஹேமந்த் சோரன் ஜார்கண்டின் முதல்-மந்திரியாக பதவியேற்பது இது 4-வது முறையாகும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்டிருந்த அவர் 39 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்