அரியானா சட்டசபை தேர்தல் முன்னிலை விவரம்: பா.ஜ.க.-30, காங்கிரஸ்-28, ஐ.என்.எல்.டி.-1, சுயேச்சை-1

அரியானா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கான முடிவை இன்று காலை 9.30 மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

Update: 2024-10-08 04:31 GMT

புதுடெல்லி,

அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்து வரும் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. எனினும், இந்த தேர்தலில் வெற்றியை பெற காங்கிரசும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

இதில், அரியானா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கான முடிவை இன்று காலை 9.30 மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதில், கட்சிகள் பெற்ற முன்னிலை விவரம் தெரிய வந்துள்ளது. இதன்படி, பா.ஜ.க.-30, காங்கிரஸ்-28, ஐ.என்.எல்.டி.-1, சுயேச்சை-1 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பெரும்பான்மைக்கான 46 தொகுதிகளை பெறும் கட்சி அல்லது கூட்டணி அரியானாவில் ஆட்சியமைக்க உரிமை கோரும்.

Tags:    

மேலும் செய்திகள்