டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடி

டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2025-01-01 12:25 GMT

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (டிசம்பர் ) ரூ.1.77 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது,

டிசம்பர் மாதம் ஈட்டப்பட்டுள்ள 1,77 லட்சம் கோடி ரூபாயில் மத்திய ஜி.எஸ்.டி ரூ. 32,836 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.47,783 கோடி, செஸ் வரி ரூ.11,471 கோடியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 7.3 சதவீதம் அதிகமாகும். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்தது.

உள்நாட்டு பரிவர்த்தனைகளின் ஜி.எஸ்.டி. 8.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.32 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மீதான வரி வருவாய் சுமார் 4 சதவீதம் அதிகரித்து ரூ.44,268 கோடியாகவும் உள்ளது.

டிசம்பர் மாதத்தில், ரூ.22,490 கோடி மதிப்பிலான ரீபண்டுகள் வழங்கப்பட்டன, இது முந்தைய ஆண்டை காட்டிலும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. ரீபண்ட்களை சரிசெய்த பிறகு, நிகர ஜி.எஸ்.டி. வசூல் 3.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.54 லட்சம் கோடியாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்