காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: விமான சேவை பாதிப்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-01-04 07:10 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடும் பனிப்பொழிவு, போதிய வெளிச்சமின்மை காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விமான சேவை பாதிப்பால் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர். வரும் நாட்களில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்