முதல் அமைச்சரவை கூட்டம் விவசாயிகளுக்கானது - பிரதமர் மோடி

முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update: 2025-01-01 12:48 GMT

புதுடெல்லி,

பொருளாதார விவகாரங்களுக்கான முதல் அமைச்சரவைக் குழு (CCEA)கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தை தொடரவும் மறு சிரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டத்தை தொடரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டு முதல் தொடர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.69,515 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்

இந்நிலையில், இந்த முதல் அமைச்சரவை கூட்டம் விவசாயிகளுக்கானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்களுடைய அரசு விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் முழு ஈடுபாடு கொண்ட அரசு. நமது தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கும் அனைத்து விவசாய சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். 2025ம் ஆண்டின் முதல் அமைச்சரவை நமது விவசாயிகளின் செழிப்பை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்