முன்னாள் வெளியுறவு துறை மந்திரி நட்வர் சிங் காலமானார்

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்த நட்வர் சிங் உயிரிழந்தார்.

Update: 2024-08-11 06:23 GMT

புதுடெல்லி,

முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி நட்வர் சிங் காலமானார். அவருக்கு வயது 93. வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் நட்வர் சிங் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில், நட்வர் சிங் நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி காலமானார். நட்வர் சிங்கின் மறைவு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, 2004-05 காலகட்டத்தில், நட்வர் சிங் வெளியுறவுத் துறை மந்திரியாக பணிபுரிந்து வந்தார். பாகிஸ்தானுக்கான தூதராகப் பணியாற்றிய நட்வர் சிங், 1966 முதல் 1971 வரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார். நட்வர் சிங் நாட்டிற்கு செய்த சேவைக்காக, அவருக்கு 1984 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்