'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்' - சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால்

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-11 10:21 GMT

Image Courtesy : ANI

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சட்டத்துறை மந்திரியாக அர்ஜுன் ராம் மேக்வால் பதவியேற்றுள்ளார். மேலும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரியாகவும் அவர் பதவியேற்றுள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிலுவையில் இருக்கும் வழக்குகளை குறைக்கவும் முன்னுரிமை அளிப்போம்" என்று தெரிவித்தார்.

நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் புதிதாக இயற்றப்பட்ட 'பாரதிய நியாய சன்ஹிதா', 'பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா' மற்றும் 'பாரதீய சாக்ஷியா சட்டம்' ஆகிய 3 சட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 21-ந்தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு டிசம்பர் 25-ந்தேதி இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். அதே சமயம், வாகன ஓட்டுநர்களால் விபத்துக்குள்ளான வழக்குகள் தொடர்பான விதிமுறைகள் உடனடியாக செயல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்