மும்பை, ஆமதாபாத் உள்பட 7 இடங்களில் அமலாக்க துறை சோதனை: ரூ.13.5 கோடி பறிமுதல்

நம்கோ வங்கி மற்றும் மராட்டிய வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வந்த கணக்குகளின் வழியே நடந்த பணபரிமாற்ற மோசடிகளை பற்றி அமலாக்க துறை விசாரித்து வருகிறது.

Update: 2024-12-06 20:53 GMT

புதுடெல்லி,

மராட்டியத்தின் மும்பை, குஜராத்தின் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள 7 இடங்களில் அமலாக்க துறை நேற்று சோதனை மேற்கொண்டது. மாலேகாவன் பகுதியில் அமைந்த நாசிக் மெர்ச்சன்ட் கூட்டுறவு வங்கியுடன் (நம்கோ வங்கி) தொடர்புடைய வழக்கை முன்னிட்டு நடந்த இந்த சோதனையில் ரூ.13.5 கோடி கைப்பற்றப்பட்டு உள்ளது.

நம்கோ வங்கி மற்றும் மராட்டிய வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வந்த கணக்குகளின் வழியே நூற்றுக்கணக்கான கோடியளவில் நடந்த பணபரிமாற்ற மோசடிகளை பற்றி அமலாக்க துறை விசாரித்து வருகிறது. இந்த வங்கிகளின் பெருமளவிலான தொகை, 21 தனிப்பட்ட நிறுவனங்களுக்கு முதலில் பணபரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பணபரிமாற்றங்கள் ஆன்லைன் வழியே நடந்த பின்பு, பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ள மும்பை மண்டல அமலாக்க துறை தெரிவித்து உள்ளது. ஆமதாபாத், மும்பை மற்றும் சூரத் நகரங்களில் உள்ள அங்காடியா மற்றும் ஹவாலா செயற்பாட்டாளர்களுக்கு இந்த பணம் சென்று சேர்ந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்