குளிர்காலம் வருவதால் குழந்தை ராமருக்கு பஷ்மினா சால்வைகள் அணிவிக்க முடிவு
குளிர்காலம் வருவதால் அயோத்தி கோவிலில் குழந்தை ராமருக்கு பஷ்மினா சால்வைகள் அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.;
அயோத்தி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடவுள் ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீ பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. ஜனவரி மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஸ்ரீ பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தக் கோவிலில் ராமர் குழந்தை வடிவமாக காட்சியளிக்கிறார். அவருக்கு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடைகளை அணிவிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குளிர்காலத்தின் அகான் மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
இந்த மாதம் முதல் குழந்தை ராமரை கதகதப்பாக வைக்கும் வகையில் க்வில்ட்ஸ், பஷ்மினா சால்வைகள் மற்றும் இதர டிசைனர் உடைகளை உடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தை ராமருக்கு நைவேத்யமாக உலர் பழங்கள் படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.