போதைப்பொருள் இல்லா பாரதம் - அமித்ஷா பெருமிதம்

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான வேட்டை தொடரும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

Update: 2024-11-15 17:13 GMT

புதுடெல்லி,

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள நங்லோய் மற்றும் ஜனக்புரி பகுதிகளில் உள்ள கூரியர் அலுவலகங்களில் 82 கிலோ கொக்கைனை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்பட இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைனின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.900 கோடி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்,  ரூ.900 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்தது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

ஒரே நாளில் அதிகளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்க மோடி அரசின் அசைக்க முடியாத உறுதியை எடுத்துக்காட்டுகிறது. டெல்லியில் உள்ள ஒரு கூரியர் மையத்தில் சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு பாராட்டுகள். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான எங்களது  வேட்டை தொடரும் என பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்