தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு; அடுத்த ஆண்டு தொடங்குகிறது

நாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்றும், புள்ளி விபரங்கள் 2026ம் ஆண்டில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2024-10-28 22:08 GMT

photo Credit: PTI

புதுடெல்லி,

நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, பிரிட்டீஷ் ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் நடத்தப்படுகின்றன.

இந்தியாவில் இதுவரை 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. 16-வது கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, நடத்தப்படவில்லை.இந்த நிலையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு மேம்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடித்து விவரங்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் போது, மக்களிடம் கேட்பதற்கு என 31 கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன. சேகரிக்கப்படும் புள்ளி விவரங்கள் தொகுக்கப்பட்டு 2026-ம் ஆண்டு வெளியிடப்பட உள்ளன. இந்த கணக்கெடுப்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அது மத்திய மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்