டி.ஏ.பி. உரத்தின் விலையை கட்டுக்குள் வைக்க சிறப்பு தொகுப்பு நிதி - மத்திய அரசு ஒப்புதல்
டி.ஏ.பி. உரத்தின் விலையை கட்டுக்குள் வைப்பதற்கு சிறப்பு தொகுப்பு நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.;
புதுடெல்லி,
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், டை-அம்மோனியம் பாஸ்பேட்(டி.ஏ.பி.) உரத்தின் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில், விவசாயிகள் 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையை ரூ.1,350-க்கு தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காக, ரூ.3,850 கோடிக்கு சிறப்பு தொகுப்பு நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த சிறப்பு தொகுப்பு நிதி 2025-ம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அஸ்வினி வைஷ்ணவ், விவசாயிகளுக்கு மலிவு விலையில் டி.ஏ.பி. உரம் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.