சவுதி அரேபியா-லக்னோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

சவுதி அரேபியா-லக்னோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.;

Update: 2024-10-15 20:28 GMT

ஜெய்ப்பூர்,

சவுதி அரேபியாவின் தம்மம் நகரில் இருந்து உத்தர பிரதேசத்தின் லக்னோ நகர் நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில், விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என இ-மெயில் ஒன்று வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த விமானம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு, அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதன்பின்னர், பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். விமானத்தில் சோதனை செய்யப்பட்டது. இதற்காக மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. எனினும், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, பயணிகள் அனைவரும் மீண்டும் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டனர். மொத்தம் 175 பயணிகள் விமானத்தில் இருந்தனர். இதனால், பயணிகள் இடையே சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்