பீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி

பீகாரில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது.;

Update:2024-11-23 14:51 IST

பாட்னா,

பீகார் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ராம்கார், தராரி, பெலகஞ்ச் மற்றும் இமாம்கஞ்சு ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

பீகாரில் புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கும் பிரபல அரசியல் ஆலோசகர் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டது. பிற கட்சிகளை வெற்றி அடைய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியை நிச்சயம் வெற்றி பெற செய்வார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. ஆனால் பீகாரில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்