வானிலை மோசம்: மும்பை-அமிர்தசரஸ் விமானம் சண்டிகாருக்கு திருப்பி விடப்பட்டது

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வானிலை மோசம் அடைந்து இருந்தது. இதனால், சண்டிகாருக்கு விமானம் திருப்பி விடப்பட்டது.;

Update: 2024-11-02 05:25 GMT

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் இருந்து அமிர்தசரஸ் நகர் நோக்கி யு.கே.695 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. இந்நிலையில், விமானம் தரையிறங்க வேண்டிய அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வானிலை மோசம் அடைந்து இருந்தது. இதனால், சண்டிகாருக்கு விமானம் திருப்பி விடப்பட்டது.

இந்த விமானம் காலை 9 மணியளவில் சண்டிகாருக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என அதுபற்றி விஸ்தாரா விமான நிறுவனத்தின் எக்ஸ் சமூக ஊடக பதிவு தெரிவிக்கின்றது. அந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்