சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு
113 வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த மூதாட்டி
மராட்டியத்தில் இன்று காலை சட்டசபை தேர்தல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், மும்பையை சேர்ந்த 113 வயதான காஞ்சன்பென் பாட்ஷா என்ற மூதாட்டி தனது வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
மும்பையில் வசித்துவரும் காஞ்சன்பென் ஒவ்வொரு மாநில சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலிலும் வாக்களித்து வருகிறார். இந்த செயலை தவறாமலும், அர்ப்பணிப்புடனும் செய்து வருவதாக வாக்குச்சாவடிக்கு மூதாட்டியுடன் வந்திருந்த குடும்ப உறுப்பினர் கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் 3 மணி நிலவரப்படி 45.53 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
3 மணி நிலவரம்:
ஜார்கண்ட் மாநிலத்தில் 3 மணி நிலவரப்படி 61.47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
உங்கள் வாக்கு உங்கள் குரல் - கிரிக்கெட் வீரர் ரஹானே
மராட்டிய சட்டசபை தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றினார் இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே. உங்கள் வாக்கு உங்கள் குரல். தயவு செய்து உங்கள் மிக முக்கியமான ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என்று கிரிக்கெட் வீரர் ரஹானே எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். எங்கள் வாக்கை செலுத்தி விட்டோம் என்று கை விரலை காட்டியப்படி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை ரஹானே பகிர்ந்துள்ளார்.
மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகை ட்விங்கிள் கன்னா வாக்களித்தார்.
மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் மதுரா தொகுதி எம்.பி.யும், பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி தனது மகளுடன் வந்து வாக்களித்தார்.
மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் வாக்களித்தார்.
1 மணி நிலவரம்:-
மராட்டியத்தில் 1 மணி நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்கண்ட் மாநிலத்தில் 1 மணி நிலவரப்படி 47.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள பாராமதியில் உள்ள வாக்குச்சாவடியில் சுப்ரியா சுலே மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களித்தனர்.
மராட்டிய சட்டசபை தேர்தல்: நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தனது குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்.