91.5 சதவீத ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டது- தெற்கு ரெயில்வே தகவல்

கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 90 சதவீதம் ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டது.

Update: 2024-07-02 16:10 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேக்குட்பட்ட சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் நாள் தோறும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் மட்டும் சராசரியாக 10 ஆயிரத்து 712 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் இயக்கப்பட்ட ரெயில்களில் 91.5 சதவீத ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன.

கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 90 சதவீதம் ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டது. இதில் ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடையே மட்டும் 27 ஆயிரத்து 361 ரெயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டது. மேலும், மாதத்துக்கு 10 ஆயிரம் ரெயில்களை கையாளும் மண்டலங்களில் தெற்கு ரெயில்வே 91.6 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதேபோல, கிழக்கு மத்திய ரெயில்வே 82.4 சதவீதமும், மத்திய ரெயில்வே 78.5 சதவீதமும் பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்