மும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது

6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் தீயணைப்புத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-12-13 04:02 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையின் பெண்டி பஜார் பகுதியில் இன்று அதிகாலை காலியான 6 கட்டிடம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காலியான பாழடைந்த கட்டிடம் என்பதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், 5 வாகனங்களில் விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்டி பஜார் பகுதியில் உள்ள நிஷான்பாடா சாலையில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடத்தது. முதற்கட்ட தகவலின்படி, கட்டிடம் பாழடைந்த நிலையில் காலியாக இருந்ததாக கூறப்படுகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்