சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடன் நடந்த என்கவுன்டரில் 3 பாதுகாப்புப்படையினர் காயம்
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடன் நடந்த என்கவுன்டரில் 3 பாதுகாப்புப்படையினர் காயமடைந்துள்ளனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் பமேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிட்பல்லி கிராமத்திற்கு அருகே புதிதாக அமைக்கப்பட்ட முகாமில் நேற்று இரவு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப்படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே திடீர் துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சண்டை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சண்டையின்போது நக்சலைட்டுகள் கையெறி குண்டுகளை வீசியதாகவும், அதற்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்ததாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த துப்பாக்கி சண்டையில் 3 பாதுகாப்புப்படையினருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும், மேலும் அவர்களுக்கு முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தப்பியோடி நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.