தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2024-09-15 04:33 GMT

பணி நிறுவனம்: தெற்கு ரெயில்வே

பணி இடங்கள்: 67 (விளையாட்டு வீரர்கள் மட்டும்)

பதவி: ஜூனியர் கிளார்க், டைம் கீப்பர் உள்ளிட்ட பதவிகள்

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

விளையாட்டு தகுதி: தடகளம், பாடி பில்டிங், சதுரங்கம், பளு தூக்குதல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், கைப்பந்து, ஆக்கி, வாட்டர் போலோ உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள். உலகக்கோப்பை, உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, தெற்கு ஆசியா கூட்டமைப்பு போட்டி, ரெயில்வே சார்பில் நடத்தப்படும் போட்டிகள் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

வயது: 1-1-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வு ஏதும் கிடையாது.

தேர்வு முறை: விளையாட்டு தொடர்பான மதிப்பீட்டு பரிசோதனை, போட்டிகளில் படைத்த சாதனை, ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-10-2024

தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: https://iroams.com/rrc_sr_sports2024/

Tags:    

மேலும் செய்திகள்