வேலை வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும்..செயற்கை நுண்ணறிவு துறை படிப்புகள்...இதோ விவரம்

இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

Update: 2024-08-26 02:37 GMT

Photo Credit: ANI

தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. இந்த மாற்றங்கள் வணிக நிறுவனங்களினுடைய வளர்ச்சிக்கும் மிகவும் உறு துணையாக அமைகின்றன. வணிகத்தில் மட்டுமல்லாமல், இன்று நாள்தோறும் நமது வாழ்வோடு இணைந்து இந்த தொழில்நுட்பங்கள் பல மாற்றங்களை வாழ்க்கை முறையில் உருவாக்கி விட்டன. இந்த மாற்றத்தால் தொழில்துறையிலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

எனவே, ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் (ARTIFICIAL INTELLEGENCE AND MACHINE LEARNING) சம்பந்தப்பட்ட படிப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டு பல பொறியியல் கல்லூரிகளிலும், கம்ப்யூட்டர் நிறுவனங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

"ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மிசின் லேர்னிங் "என்பது ஒரு துறை சார்ந்த படிப்பாகும். இதில் தியரி , ஸ்டாண்டர்ட் ,மெதட்ஸ் மற்றும் இன்னோவேஷன்ஸ் எனப்படும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் போன்றவைகள் இடம்பெறுகின்றன.

இவை அனைத்தும் ,மேத்தமேடிக்ஸ், கான்கிரீட் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் எம்பெடேட் சிஸ்டம்ஸ் ஆகியவற்றோடு தொடர்புடைய கண்டுபிடிப்புகளின் மூலம் செயற்கை நுண்ணறிவு என்னும் புதிய பிரிவை உருவாக்குகின்றது. இதனால், ஒரு மனிதன் இயங்குவதைப்போல மனித செயல்பாடுகளை ஏற்படுத்தி ,நுண்ணறிவின் மூலம் மனித குல வளர்ச்சிக்கு உதவும் நிலையில் எந்திரம் மூலம் செயல்பட வழிவகை செய்கிறது.இதனையே ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மிசின் லேர்னிங் என அழைக்கிறார்கள்.

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் படிப்புகள்

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் சம்பந்தப்பட்ட படிப்புகள் சில ..

*GenAI & மெஷின் லேனிங்கில் நிபுணத்துவ சான்றிதழ் புரோகிராம் (IBM)

*ஏஐ மற்றும் இயந்திர கற்றலில் முதுகலைப் பட்ட படிப்புகள்

*செயற்கை நுண்ணறிவு அறிமுகம்

*ஐபிஎம் ஏஐ டெவலப்பர் நிபுணத்துவ சான்றிதழ்

*பைதான் டேடா சயின்ஸ் ஏஐ& டெவலப்மண்ட்

*ஏஐ பார் எவ்ரிஒன்

* ஜெனரேட்டிவ் ஏஐ அறிமுகம்

*ஏஐ மற்றும் எம்.எல். கோர்ஸ்

*செயற்கை நுண்ணறிவு படிப்புகள்

*ஏஐ மற்றும் மெஷிங் லேர்னிங் கோர்ஸ்

செயற்கை நுண்ணறிவில் முதுகலை படிப்புகள்

தேவையான கல்வி தகுதிகள்

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மெஷின் லேர்னிங் என்னும் படிப்பில் சேர கண்டிப்பாக ஒரு பட்டப் படிப்பு தேவை. குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் கணிதம்மற்றும் கணிதம் தொடர்புடைய படிப்புகளில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

ப்ரோக்ராம் லாங்குவேஜஸ்மற்றும் புள்ளியியல் பகுப்பாய்வு போன்றவற்றில் போதிய பணி அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த படிப்பில் சேர முன்னுரிமை வழங்கப்படும்.

பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களை விருப்பபாடமாக எடுத்து படித்தவர்களும் பி.இ ஆர்ட்டிஃபிஷயல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், பி.இ ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மிசின் லேர்னிங் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.

இவைதவிர, டேட்டா சயின்ஸ் சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஏ ஐ டெவலப்மெண்ட் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் இந்த படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். ஏற்கனவே பணி அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மெஷின் லைனிங் படிப்பு மிகவும் பக்கபலமாக அமைந்து, பதவி உயர்வுக்கு உறுதுணையாக அமையும்.

வேலைவாய்ப்பு

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மெஷின் லேர்னிங் என்னும் படிப்பை முடித்தவர்களுக்கு வங்கிகள், ஈ காமர்ஸ், ஹெல்த் கேர் , சோசியல் மீடியா போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விப்ரோ, டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், அமேசான், கூகுள், ஆக்சன்ச்சர் , மைக்ரோசாப்ட், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் இந்த படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குகின்றன.

பதவி உயர்வு

ஆரம்பத்தில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மெஷின் லேர்னிங் என்னும் படிப்பை முடித்தவர்களுக்கு டேடா சயின்டிஸ்ட், மெஷின் லேர்னிங் என்ஜினியர்ஸ், ஏஐ டெவலப்பர் போன்ற போன்ற பதவிகள் வழங்கப்படும். அதன்பின்னர், மிக முக்கியமான பொறுப்புகள் அனுபவத்தின் அடிப்படையிலும் ,திறமையின் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. சீப் டேடா சயிண்டிஸ்ட்ஸ், ஏஐ ஆர்கிடெக்ஸ், இயக்குநர் ஆப் ஏஐ போன்ற உயர் பதவிகளும் பெற வாய்ப்புகள் உள்ளது.

ஏராளமான நன்மைகள்

"ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் மெஷின் லேர்னிங்" மூலம் ஏராளமான நன்மைகள் பல்வேறு துறைகளில் உருவாகி உள்ளது. டேட்டா அனாலிசிஸ், நிறுவன செயல்பாடுகளில் உள்ள குறைகளை நீக்கி மிகத் துல்லியமான முடிவுகள் எடுக்க இது உதவுகிறது. புத்தாக்க சிந்தனைகளை வணிகத்தில் புகுத்தி, போட்டியாளர்களை சந்திக்கும் விதத்தில் வணிக நிறுவனத்தை தயார் செய்ய உதவுகின்றன.

மருத்துவத்துறையில், நோயாளிகள் பராமரிப்பு, அவர்களுக்கான மருத்துவ சேவை, நோயின் தன்மையை அறிதல் போன்ற பல்வேறு உடல்நலம் சம்பந்தப்பட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ள இது பக்கபலமாக அமைகிறது.

"ஏ .ஐ " (AI )என அழைக்கப்படும் "ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் "மூலம் "சைபர் செக்யூரிட்டி பல நன்மைகளை பெற்றுள்ளது. குறிப்பாக, இணையதளம் மூலம் நடைபெறும் குற்றங்களை எளிதில் கண்டு கொள்ளவும் ,தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் இயலும்.அறிவியல் ஆய்வுகளை மிக எளிதான முறையில் செய்து முடிக்கவும், மருத்துவம், வானவியல் போன்றவற்றில் எளிதான கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் இது துணை நிற்கிறது.சுற்றுச்சூழல் பாதுகாப்பாக அமைக்கவும் , வீணாகும் குப்பைகளை பயன்படும் வகையில் மாற்றவும் இந்த தொழில்நுட்பம் அடித்தளமாக அமைகிறது. மொத்தத்தில், "ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்" என்பது தானாகவே செயல்கள் நடைபெறுவதற்கும், திரும்பத்திரும்ப செய்யும் வேலைகளை

குறைத்து நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், விவேகத்துடனும் வியூகத்துடனும் முடிவுகள் எடுப்பதற்கும் உதவுகின்றன.புத்தம் புதிய சிந்தனைகளால் வித்தியாசமான முறையில் உலகுக்கு பயன்படும் விதத்தில் இந்த தொழில்நுட்பம் அமைவதால், இதனை அறிந்து கொள்ள, பயன்படுத்த மக்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்