ஐ.டி.ஐ.களில் உதவி தொகையுடன் மாணவர் சேர்க்கை - கால அவகாசம் நீட்டிப்பு
சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80 சதவிகிதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கான இணையதள கலந்தாய்வு கடந்த மாதம் 28 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. எனினும், மாணவர்களின் நலன் கருதி 8-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 1-ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்பொழுது மாணவர்களின் நலன் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 - வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணிகள், பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.
சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் அலைபேசி எண் மற்றும் whatsapp எண்: 9499055689 அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.