மத்திய அரசு வேலை: 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசில் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2024-08-10 04:59 GMT

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2006- பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரம் வருமாறு:

தேர்வு நடத்தும் நிறுவனம்:ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி)

காலி பணி இடங்கள்: 2006

பதவி: ஸ்டெனோகிராபர் கிரேடு 'சி' அண்ட் 'டி'

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு படித்தவர்கள்

வயது: 1-8-2024 அன்றைய தேதிப்படி ஸ்டெனோ கிராபர் 'சி' பதவிக்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-8-1994-க்கு முன்போ 1-8-2006-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. ஸ்டெனோகிராபர் 'டி' பதவிக்கு 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1997-க்கு முன்போ, 1-8-2006-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஸ்டெனோகிராபி திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு

தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மற்றும் புதுச்சேரி

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-8-2024

இணையதள முகவரி: https://ssc.gov.in

Tags:    

மேலும் செய்திகள்