எடை குறைப்பில் தெரிந்து கொள்ள வேண்டியவை

உடல் எடை குறைப்பில் ஈடுபடும்போது, வாழ்க்கை முறை, உணவு முறை, பொருளாதார நிலை, வேலை போன்றவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படும் வழிமுறையே வெற்றி அடையும்.;

Update: 2022-05-23 05:30 GMT

டை குறைப்பில் ஈடுபடும் பெண்கள், அது சார்ந்த கீழ்கண்ட உண்மைகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

* கைரேகை போலவே ஒவ்வொருவருடைய உடல் எடையும், தனித்தன்மையானவை. எடையை குறைக்க முடிவு செய்த பின்பு ஊட்டச்சத்து நிபுணரை அணுகி தெளிவான விளக்கங்களையும், ஆலோசனையையும் பெறுவது அவசியம். ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் முடிவை தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் உணவுப் பட்டியலைத் திட்டமிட வேண்டும்.

* உடலின் தன்மையை அறிந்து, அதற்கேற்ப சரிவிகித உணவுகளை சாப்பிடும்போது, தேவையற்ற கழிவுகள் நீக்கப்பட்டு ஆரோக்கியமான வழியில் எடை குறையும்.

* எப்போது, எப்படி உணவை உட்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். ஊட்டம் மிகுந்த உணவாக இருந்தாலும், தவறான நேரத்தில் சாப்பிடும்போது தேவையில்லாத நஞ்சாக மாறி உடலில் சேர்ந்துவிடுகிறது. செரிமானத்திற்கு நெருப்பின் ஆற்றல் பெருமளவு தேவைப்படுவதால், சூரிய உதயத்தில் இருந்து அஸ்தமனத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது.

* அனைவருக்கும் 'பொதுவான டயட்' என்பதே தவறான புரிதலாகும். இதற்கு ஒரு எளிய உதாரணம், சர்க்கரை நோயாளி, ரத்தசோகையும் உள்ளவராக இருக்கும் பட்சத்தில் பொதுவாக பரிந்துரைக்கப்படும் பேரீச்சை, பீட்ரூட் போன்ற காய்கறிகளைச் சாப்பிட முடியாது. அதற்கு மாற்றாக முருங்கைக் கீரை, மாதுளை, பூசணி விதைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

* அதைப் போலவே இரும்புச்சத்தை, வைட்டமின்-சி உடன் சாப்பிடும்போது மட்டுமே உடல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும். வைட்டமின்-சி ஆரஞ்சு, எலுமிச்சையில் அதிகம் உள்ளது. ஆனால் அந்த நபருக்கு கபம் அதிகமாக இருக்கும்போது, அவை ஜலதோஷத்தை ஏற்படுத்திவிடும். எனவே இரும்புச்சத்துடன் அந்நபருக்கு நெல்லிக்காய், குடைமிளகாய் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

* மற்ற முறைகளைக் காட்டிலும் ஆயுர்வேத முறையில் உடல் எடையைக் குறைப்பது எளிமையானது. உடல் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று வகையைச் சார்ந்தது. உடல் தன்மை, தோஷ அளவு, ரத்த பரிசோதனை முடிவுகள், தற்போது இருக்கும் நோய்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு டயட் மேற்கொள்வது சிறந்தது.

* உடல் எடை குறைப்பில் ஈடுபடும்போது, வாழ்க்கை முறை, உணவு முறை, பொருளாதார நிலை, வேலை போன்றவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படும் வழிமுறையே வெற்றி அடையும்.

* எடை குறைப்பில் உணவு உடற்பயிற்சி போல தூக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு பலவிதமான உடற்பயிற்சிகள் செய்து வந்தாலும் சீரான தூக்கத்தை கடைப்பிடிக்காவிட்டால் எடை குறைப்பு சாத்தியமாகாது. 

Tags:    

மேலும் செய்திகள்