முக அழகை அதிகரிக்கும் 'பேஸ் ஷீட்' மாஸ்க்

சென்சிடிவ் சருமத்தினருக்கு, சிலவகை பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்ட ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்கில் வைட்டமின் சி, பி6, காப்பர், ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கும். இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்யும்.

Update: 2023-10-15 01:30 GMT

ழகு பராமரிப்பில் இன்று பல புதுமைகள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் 'பேஸ் ஷீட்' மாஸ்க். இது பல்வேறு வகைகளில், சருமத்தின் பொலிவை அதிகரிக்கக்கூடிய திரவங்களை உள்ளடக்கி தயாரிக்கப்படும் ஒருவகை காகிதம் போன்ற தாளாகும். அழகு நிலையங்களில் செய்யப்படும் பேஷியலுக்கு ஈடாக, குறைந்த நேரத்தில் அதே பலனை கொடுக்கக்கூடியது பேஷியல் ஷீட் மாஸ்க்.

யார், எதை தேர்வு செய்யலாம்?

வறண்ட சருமம்: வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் ஈரப்பதம் நிறைந்த மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும். எலுமிச்சை மாஸ்க், கற்றாழை மாஸ்க், கடற்பாசி மாஸ்க் என இதில் பல வகைகள் உள்ளன.

எலுமிச்சை மாஸ்க் ஷீட், சருமத்தை ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் மாற்றும். கடற்பாசி மாஸ்க் இறந்த செல்களை அகற்றி சருமத்தை சுத்தமாக்குவதுடன், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். கற்றாழை ஷீட் மாஸ்க் உபயோகித்தால், கற்றாழையின் முழு பலனும் கிடைக்கும். இதில் உள்ள ஜெல் முகத்தில் ஆழமாக ஊடுருவி சருமத்தை மென்மையாக மாற்றும். இது தவிர, பாதாம் எண்ணெய்யின் சத்துக்கள் நிறைந்த மாஸ்க்கையும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தேர்வு செய்யலாம்.

எண்ணெய்ப் பசை சருமம்: எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்தினர், எண்ணெய்ப் பசையை நீக்கி பொலிவை அதிகரிக்கும் வகையிலான மாஸ்க் ஷீட்டை பயன்படுத்த வேண்டும். இதற்கு டீ ட்ரீ ஷீட் மாஸ்க், இயற்கையான தேன் நிறைந்த ஹனி மாஸ்க்குகளை தேர்வு செய்யலாம்.

டீ ட்ரீ மாஸ்க் முகத்தை மென்மையாக்குவதுடன், அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கி பளபளப்பாக்கும். ஹனி மாஸ்க்கில், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது, முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி, திறந்திருக்கும் துளைகளையும் அடைக்கும்.

சென்சிடிவ் சருமம்: சென்சிடிவ் சருமத்தினருக்கு, சிலவகை பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்ட ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்கில் வைட்டமின் சி, பி6, காப்பர், ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கும். இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்யும்.

முகப்பரு உள்ள சருமம்: முகப்பரு மற்றும் அதன் தழும்புகள் உள்ள சருமத்தினர், அரிசி ஷீட் மாஸ்க், அவகோடா ஷீட் மாஸ்க் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அரிசி ஷீட் மாஸ்க்கில் ஸ்டார்ச், புரதம், வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. அவகோடாவில் வைட்டமின் ஈ, லெசித்தன் ஆகிய சத்துக்கள் உள்ளது. இது முகத்தை சுத்தமாக்கி புத்துணர்வூட்டும். முகத்தில் உள்ள தழும்பு, கருந்திட்டுக்கள் ஆகியவற்றை குறைக்கும். முகத்தில் அதிகப்படியான சுருக்கங்கள் இருப்பவர்கள் ரெட் ஒயின் ஷீட் மாஸ்க், புளுபெர்ரி ஷீட் மாஸ்க், மாதுளம் பழ ஷீட் மாஸ்க் ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்தது.

எப்படி பயன்படுத்துவது?

ஷீட் மாஸ்க்கை போடுவதற்கு முன்பு முகத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் உங்களுடைய முக வடிவத்திற்கு சரியாக பொருந்தும் வகையில் மாஸ்க்கை பொருத்த வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதை நீக்கலாம். இந்த ஷீட் மாஸ்க்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.

Tags:    

மேலும் செய்திகள்