பருவகால அலர்ஜியை எளிதில் தடுக்கலாம்

நீர்க்கசிவுகள் மற்றும் பாக்டீரியாக்கள், பூச்சிகள் எளிதில் உருவாகும் இடங்களை ஆரம்ப நிலையிலேயே சுத்தப்படுத்த வேண்டும். குளிர் மற்றும் மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பே ஈரப்பதமூட்டிகளையும், கோடை காலத்தில் ஏ.சி. இயந்திரங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

Update: 2023-10-22 01:30 GMT

வ்வொரு பருவகால மாற்றத்தின்போதும் தட்பவெப்பம், காற்றின் ஈரப்பதம், உணவு பொருட்களின் தன்மை ஆகியவற்றின் காரணமாக சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். இதைத் தவிர்க்க பருவகால மாற்றத்தின்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும். இதைப் பற்றிய தகவல்களை காண்போம்.

பருவகால ஒவ்வாமையால் உண்டாகும் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையான வகையில் இருக்கும். இருமல், தும்மல், மூக்கு மற்றும் கண்களில் நீர் வடிவது, மூக்கு மற்றும் காதுகளில் அடைப்பு, கண்கள் மற்றும் சைனஸ் பாதைகளில் அரிப்பு, காதுகளில் சீழ் வடிவது, தலைவலி, மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகள் உண்டாகும். இதுதவிர, அதிக காய்ச்சலுடன் ஆஸ்துமா பாதிப்பும் ஏற்படலாம்.

ஒவ்வாமையில் இருந்து தப்பிக்கும் வழிகள்:

வீட்டைச் சுற்றி ஒவ்வாமையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுக்களை அகற்ற வேண்டும். வீட்டிற்குள் தரை விரிப்புகள் மற்றும் மரச்சாமான்களை அகற்றி சுத்தம் செய்வது, குழந்தைகளின் அறையில் அடைத்து வைத்திருக்கும் பொம்மைகளை அகற்றுவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்சினைகள் சார்ந்த ஒவ்வாமையைத் தடுக்க முடியும்.

வாரத்திற்கு ஒருமுறை படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள் ஆகியவற்றை வெந்நீரில் நனைத்து சுத்தப்படுத்த வேண்டும். தலையணைகளை அழுக்கு, தூசு இல்லாத உறைகளால் மூடி வைக்க வேண்டும்.

நீர்க்கசிவுகள் மற்றும் பாக்டீரியாக்கள், பூச்சிகள் எளிதில் உருவாகும் இடங்களை ஆரம்ப நிலையிலேயே சுத்தப்படுத்த வேண்டும். குளிர் மற்றும் மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பே ஈரப்பதமூட்டிகளையும், கோடை காலத்தில் ஏ.சி. இயந்திரங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

உணவில் மாற்றம்:

உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது சிறந்தது. புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், முழு தானியங்கள், மீன் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

அனைத்து பருவகாலத்திலும் தினமும் காலையில் கிரீன் டீ பருகலாம். இதில், இயற்கையான ஆன்டி ஹிஸ்டமின்கள் உள்ளன. இவை ஒவ்வாமையால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் குறைக்கும்.

மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள், கீரைகள், முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

மசாலா பொருட்கள், காரமான உணவுகள், காபின், பால் பொருட்கள், சாக்லெட், வேர்க்கடலை, சிவப்பு இறைச்சி, சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்