பாதங்களைக் காக்கும் 'பியூமிஸ் கல்'

‘பியூமிஸ் கல்’ பாதங்களின் உலர்ந்த சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதை நேரடியாக சருமத்தின் மீது பயன்படுத்தக்கூடாது. உலர்ந்த கல்லை பாதங்களின் மீது தேய்ப் பதற்கு முன்பு, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் சருமத்தில் சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Update: 2022-06-12 01:30 GMT

ழகைப் பராமரிப்பது என்பது முகத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், உச்சி முதல் பாதம் வரை கவனம் செலுத்துவதாகும். முக அழகைப் பாதுகாப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் பலரும் பாதங்களைப் பற்றி யோசிப்பது கிடையாது. இதன் காரணமாக பாதங்களில் வெடிப்புகள் உண்டாகிறது. இது அழகைக் கெடுப்பதோடு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

கால்களுக்குப் பொருந்தாத காலணிகள், அளவுக்கதிகமான உப்புத் தண்ணீரில் பாதங்கள் படுவது, சத்துக்குறைவு போன்ற காரணங்களால் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. இத்தகைய வெடிப்புகள், இறந்த செல்கள் படிதல் போன்ற பிரச்சினைகளை நீக்கி பாதங்களை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிப்பதற்கு 'பியூமிஸ் கல்' உதவுகிறது.

இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

'பியூமிஸ் கல்' பாதங்களின் உலர்ந்த சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதை நேரடியாக சருமத்தின் மீது பயன்படுத்தக்கூடாது. உலர்ந்த கல்லை பாதங்களின் மீது தேய்ப்

பதற்கு முன்பு, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் சருமத்தில் சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பியூமிஸ் கல்லைப் பாதங்களின் மீது மென்மையாக வட்ட வடிவில் சுழற்றி தேய்க்கவும். இதனால் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். ஒவ்வொரு முறை பியூமிஸ் கல்லைப் பயன்படுத்திய பிறகும், அதில் ஒட்டியிருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். ஒருவர் பயன்படுத்திய கல்லை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. ஒரே கல்லை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

பியூமிஸ் கல்லைப் பயன்படுத்திய பிறகு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி பாதங்களை மசாஜ் செய்துகொள்ளலாம். மாய்ஸ்சுரைசருக்குப் பதிலாக தேங் காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வெது வெதுப்பான நீரில் கழுவலாம்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களில் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்து விடவும்.

பிறகு, சுத்தமான துண்டைப் பயன்படுத்தித் துடைத்து, உலரவிட்டு காலுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். இவ்வாறு வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால், கால்கள் கருமையாவதையும், குதிகால் வெடிப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம்.

பாதங்களில் காயங்கள், புண் ஏதேனும் இருந்தால் பியூமிஸ் கல்லை பயன்படுத்தக்கூடாது. 

Tags:    

மேலும் செய்திகள்