எண்ணங்களை மாற்றும் வண்ணங்கள்
பிரகாசமாகத் தெரியும் மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, நட்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. மஞ்சள் நிறத்தை பார்க்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவை இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்ட மனித பண்புகள்.;
சில வகை நிறங்கள் உங்களுக்குள் பதற்றத்தையும், பயத்தையும் உண்டாக்குவதை உணர்ந்து இருக்கிறீர்களா? சில நிறங்கள் உங்களை சூழ்ந்து இருக்கும்போது உங்கள் மனம் அமைதியில் மூழ்குவதை அறிந்திருக்கிறீர்களா? நிறங்களுக்கும், நமது உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நிறங்கள் நமது உடல் மற்றும் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.
வண்ண உளவியலின்படி, நிறங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சூடானது; மற்றொன்று குளுமையானது. அந்த வகையில் நிறங்களும், அவை ஏற்படுத்தும் மாற்றங்களும் குறித்த தகவல்களை இங்கே அறிவோம்.
சிவப்பு:
கவனத்தை ஈர்க்கும் நிறம் சிவப்பு. இது உங்களை உற்சாகமாகவும், புத்துணர்வாகவும் உணர வைக்கும். கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பய உணர்வுடன் இருப்பவர்களுக்கு சிவப்பு நிறம் நம்பிக்கையை அளிக்கும்.
மஞ்சள்:
பிரகாசமாகத் தெரியும் மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, நட்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. மஞ்சள் நிறத்தை பார்க்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவை இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்ட மனித பண்புகள்.
நீலம்:
நீல நிறம் அமைதியைக் குறிக்கும். இது மன வலிமை மற்றும் சிந்தனையில் தெளிவை உண்டாக்கும். வெளிர்நீல நிறம், ஒருவருக்குள் நேர்மறை எண்ணத்தை விதைக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம், அடர்நீல நிறம் ஒருவருக்கு தனித்து விடப்பட்டது போன்ற எண்ணத்தை உருவாக்கும்.
பச்சை:
பச்சை நிறம் இயற்கை மற்றும் பணத்துடன் அதிக தொடர்பு கொண்டதாகும். வளர்ச்சி, கருவுறுதல், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இந்த நிறம் அடிப்படையாகும். மனதில் இருக்கும் பதற்றம், கவலையை போக்கி அமைதியை தரும் ஆற்றல் பச்சை நிறத்துக்கு உண்டு. அதேசமயம், அடர் பச்சை நிறத்தை பார்க்கும்போது, மனதில் பொறாமை குணம் தோன்ற வாய்ப்புள்ளது.
ஊதா:
ஊதா நிறம் செல்வ செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. கற்பனைத் திறனைத் தூண்டி, படைப்பாற்றலை மேம்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
வெள்ளை:
வெள்ளை, மன அமைதியின் நிறம். இது கருணை, அன்பு, காதல் உள்ளிட்ட உணர்வுகளை அதிகரிக்கும்.