ஓ.டி.டி. யில் வெளியாகும் 'நாம் நமக் நிஷான்' வெப்தொடர்
வருண் சூட், டேனிஷ் சூட் நடித்துள்ள 'நாம் நமக் நிஷான்' வெப்தொடர் அமேசான் மினி டிவி ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
மும்பை,
ஜக்கர்நாட் புரொடக்சன்ஸ் தயாரித்து, வரவிருக்கும் தொடர் 'நாம் நமக் நிஷான்'. இதில் வருண் சூட் மற்றும் டேனிஷ் சூட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் ஹெல்லி ஷா, கரண் வோஹ்ரா மற்றும் ரோஷ்னி வாலியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடர் சகோதரத்துவம் மற்றும் தேசத்தின் மீதான அன்பு ஆகியவற்றை மையமாக கொண்டது.
இந்த தொடர் சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி முகாமில் உள்ள இரண்டு இளம் கேடட்களின் பயணங்கள் பற்றிய உண்மையான சாரம்சத்தை அடிப்படையாக கொண்ட கதையாகும். கேடட்டுகள் இனம், சாதி, மதம் மற்றும் சமயம் ஆகிய வேறுபாடுகளை கடந்து சகோதரத்துவத்தின் உண்மையான அர்த்தத்தை கண்டறிந்து, இந்தியருக்குள் தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர் வருகிற 14-ந் தேதி அமேசான் மினி டிவி ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. மேலும், அதில் 'அதிகாரிகள் பயிற்சி முகாமின் சுவர்களுக்குள் உள்ள இதயம், நட்பு மற்றும் மனஉறுதியின் கதை இது' என்று குறிப்பிட்டுள்ளனர்.