இன்று ஓ.டி.டியில் வெளியான படங்கள் - 13.09.24
இன்று ஓ.டி.டியில் சில படங்கள் வெளியாகியுள்ளன.;
சென்னை,
திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும், நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
'நுனக்குழி'
நடிகர் மோகன்லாலை வைத்து 'நேரு' என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர் ஜித்து ஜோசப், தற்போது 'நுனக்குழி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பாசில் ஜோசப் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நகைச்சுவை திரைப்படமான இது, சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்ற இப்படம் இன்று ஜி5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'நண்பன் ஒருவன் வந்த பிறகு'
'மீசைய முறுக்கு' படத்தில் தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த ஆனந்த், தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன், பவானி ஸ்ரீ, மோனிகா, இர்பான் மற்றும் ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் 2-ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது
'ரகு தாத்தா'
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் 'ரகு தாத்தா'. எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்தது
இந்த நிலையில், இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் இன்று ஜி5 தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கோலி சோடா ரைசிங்'
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் உருவானது.
இதில் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர்கள் இல்லாமல் புது நடிகர்கள் நடித்திருந்தனர். ரப்நோட் நிறுவனம் தயாரிப்பில் அச்சு ராஜா மணி இசையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்றது.
தற்போது இப்படத்தின் அடுத்த பாகம் வெப் சீரிஸாக தயாராகி உள்ளது. இந்த வெப் சீரிஸுக்கு 'கோலி சோடா ரைசிங்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சேரன், ஷியாம், ரம்யா நம்பீசன், அபிராமி, அம்மு அபிராமி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸ் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட ஏழு மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.