இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.;

Update:2025-01-09 10:51 IST

'சட்டம் என் கையில்'

'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இயக்கத்தில் சதீஸ் நடித்துள்ள படம் 'சட்டம் என் கையில்'. இந்த படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர். இது கிரைம் திரில்லர் திரைப்படமாகும். இப்படம் கடந்த 6-ந் தேதி டெண்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'பி.டி.சார்'

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம் 'பி.டி.சார்'. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகும் 25-வது திரைப்படம் இதுவாகும். இந்தப் படத்தை 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடித்துள்ளார். பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியரின் வாழ்வியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 6-ந் தேதி டெண்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'அந்தகன்'

நடிகர் பிரசாந்த் அவரது தந்தை இயக்கத்தில் நடித்துள்ள படம் 'அந்தகன்'. இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 6-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'ஜாலியோ ஜிம்கானா'

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள படம் 'ஜாலியோ ஜிம்கானா'. இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இப்படம் கடந்த 7-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'ஐ அம் காதலன்'

நஸ்லன் மற்றும் இயக்குனர் கிரிஷ் இணைந்து பணியாற்றியுள்ள படம் 'ஐ அம் காதலன்'. இந்த படத்தில் நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ஒரு சைபர் கிரைம் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நஸ்லேன் ஒரு ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 7-ந் தேதி மனோரமா மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'ஆரகன்'

'ஆரகன்' இயக்குனர் அருண் கே ஆர் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா என பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'ஆரகன்'. இப்படத்தினை தயாரிப்பாளர் ஹரிகரன் பஞ்சலிங்கம் தயாரிக்க,  விவேக் இசையமைத்துள்ளார். புராண கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 8-ந் தேதி (நேற்று) வெளியாகி உள்ளது.

'சூக்ஷமதர்ஷினி'

நடிகை நஸ்ரியா பசில் ஜோசப்புடன் இணைந்து சூக்ஷமதர்ஷினி படத்தில் நடித்துள்ளார். தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ், கோட்டயம் ரமேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். எம்.சி.ஜித்தின் இயக்கும் இப்படத்தை சமீர் தாஹிர், ஷைஜு காலித் இணைந்து தயாரித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் படத்துக்கு இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று (9-ந் தேதி) ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'அதோமுகம்'

சுனில் தேவ் எழுதி இயக்கிய படம் அதோமுகம். நாடகம் தொடர்பான பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தில் எஸ். பி. சித்தார்த், சைதன்யா பிரதாப், சரித்திரன், ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்பை ஆப்பை இன்ஸ்டால் செய்வதால் ஒருவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே அதோமுகம் படத்தின் கதை ஆகும். இப்படம் நாளை (10-ந் தேதி) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'ஆட் விட்டம்'

இட்ஸ் காம்ப்ளிகேட் படத்தின் மூலம் புகழ் பெற்ற ரோடால்ப் லாகா இயக்கிய படம் 'ஆட் விட்டம்'. இப்படம் கடத்தப்பட்ட தனது மனைவியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிராங்க் லாசரெப் பற்றிய கதை. ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெக்கனிங்'

கிறிஸ்டோபர் மெக்குவாரி என்பவர் எரிக் ஜெண்ட்ரெசனுடன் இணைந்து எழுதி இயக்கிய திரைப்படம் 'மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெக்கனிங்'. இப்படம் அதிரடி உளவு திரைப்படமாகும். இது மிஷன்: இம்பாசிபிள் திரைப்படத் தொடரின் ஏழாவது பாகமாகும். இதில் ஹெய்லி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், ரெபேக்கா பெர்குசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 11-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்