ஓ.டி.டியில் வெளியானது சிவராஜ்குமாரின் 'பைரதி ரணகல்'

சிவராஜ்குமார் நடிப்பில் நவம்பர் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பைரதி ரணகல்'.

Update: 2024-12-29 07:51 GMT

சென்னை,

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவரது நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பைரதி ரணகல்'. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ராகுல் போஸ், தேவராஜ், அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான 'முப்தி' படத்தின் தொடர்ச்சியாக உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் ஓ.டி.டியில் வெளியாகி உள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் தளத்தில் கடந்த 25-ம் தேதி 'பைரதி ரணகல்' வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்