'விடுதலை 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்

'விடுதலை 2' படம் ஓ.டி.டி.யில் ஒரு மணிநேரம் கூடுதலாக வெளியாகும் என இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-12-30 11:07 GMT

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை 2'. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சேத்தன், கென் கருணாஸ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க இளையராஜா இசையமைத்துள்ளார்.

மக்களுக்காக போராடிய, ஆனாலும் மக்களுக்கே தெரியாத, தலைவர்கள் குறித்து இப்படம் பேசியுள்ளது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ. 54 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் 'விடுதலை 2' படம் ஓ.டி.டி.யில் திரையரங்குகளில் இடம்பெற்ற காட்சிகளை விட ஒரு மணிநேரம் கூடுதலாக வெளியாகும் என இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்