இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.

Update: 2024-12-19 07:03 GMT

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

'ஹிட் லிஸ்ட்'

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஹிட் லிஸ்ட்'. இந்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், சரத்குமார், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா தத்தா, பால சரவணன், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'டுவிஸ்டர்ஸ்'

டுவிஸ்டர்ஸ் என்பது 1996-ம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இப்படம் அமெரிக்காவின் டொர்னாடோ சந்து பின்னணியில் அமைக்கப்பட்டது, புயல் துரத்துபவர்கள் தனிப்பட்ட சவால்களை வழிநடத்தி அழிவு சக்திகளை எதிர்கொள்ளும் கதையை இது விவரிக்கிறது. இப்படம் டிசம்பர் 18-ம் தேதி (நேற்று) ஜியோ சினிமா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்'

சுசி தலாதி இயக்கிய இப்படம், பெண் கண்ணோட்டம் மற்றும் ஆணாதிக்க விதிகளுக்கு எதிரான போராட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. நடிகை பிரீத்தி பாணிகிரஹி மீராவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பெண்ணை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படமானது இமயமலை அடிவாரத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நேற்று அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'கலிங்கா'

துருவா வாயு இயக்கிய தெலுங்கு பேன்டஸி ஹாரர் திரில்லர் திரைப்படம் 'கலிங்கா'. இத்திரைப்படத்தில் துருவா வாயு மற்றும் பிரக்யா நயன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்., அவர்களுடன் ஆடுகளம் நரேன், லக்ஷ்மன் மீசாலா, தணிகெல்ல பரணி, ஷிஜு ஏஆர், முரளிதர் கவுட், சம்மேத காந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். சமூக-கற்பனைக் கூறுகளை பின்னணியாகக் கொண்ட இந்த திரில்லர் படம் இன்று (19-ந் தேதி) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'லீலா வினோதம்'

பவன் குமார் சுங்கரா இயக்கும் புதிய வெப் தொடர் 'லீலா வினோதம்'. மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த தொடரில் சண்முக் ஜஸ்வந்த், அனகா அஜித் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் ஒரு கால நாடகம் மற்றும் சண்முக் நடித்த ஒரு இளம் மாணவனின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் ஒரு இளம் மாணவனின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த தொமடர் உருவாகி உள்ளது. இந்த தொடர் இன்று ஈடிவி-வின் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'நிறங்கள் மூன்று'

'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இப்படம் நாளை (20-ந் தேதி) அமேசான் பிரைம், ஆஹா தமிழ், சிம்பிலி சவும் ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.

'ஜீப்ரா'

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் 'ஜீப்ரா'. தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கில் இருந்து சத்யதேவ் மற்றும் கன்னடத்தில் இருந்து தனஞ்சயா ஆகியோரின் முக்கிய நட்சத்திரங்களின் மூன்று வெவ்வேறு கதைகளை பிணைத்து இப்படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில், இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'பணி'

மலையாள நடிகர் நடிகர் ஜோஜு ஜார்ஜ், இயக்கி நடித்துள்ள படம் 'பணி'. நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்கள். கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 

 

Tags:    

மேலும் செய்திகள்