ஓ.டி.டி.யில் வெளியாகும் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'சூது கவ்வும் 2'

எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'சூது கவ்வும் 2' படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.;

Update:2025-01-11 20:35 IST

கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகமான 'சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்' என்ற பெயரில் கடந்த மாதம்13-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் 'மிர்ச்சி சிவா' கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் டெண்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வருகிற 13-ந் தேதி வெளியாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்