ஓ.டி.டி.யில் வெளியாகும் 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்' வெப் தொடர்
சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்' வெப் தொடரின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை,
சத்யராஜ் நடிப்பில் முகமது ரசித் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்'. இந்த வெப் தொடரில் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, ரக்சன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாமிரா இயக்கியுள்ள இந்த வெப் தொடருக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
இந்தநிலையில் படக்குழு இந்த தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். அதில் சத்யராஜ் மற்றும் சீதா கணவன் மனைவியாக நடித்துள்ளனர். இவரது மகன் ரக்சன் வர்ஷா பொல்லமா என்ற பெண்ணை காதலிக்கிறார். அவளின் தாயான ரேவதி, சத்யராஜின் முன்னாள் காதலியாக இருக்கிறார். அந்தவகையில் இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
மேலும் இந்த தொடரின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி, வருகிற 16-ந் தேதி இந்ததொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.