இன்று ஓ.டி.டியில் வெளியான படங்கள் - 23.08.24
இன்று ஓ.டி.டியில் சில படங்கள் வெளியாகியுள்ளன.;
சென்னை,
திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
ராயன் (Raayan)
தனுஷ் இயக்கி நடித்து கடந்த மாதம் 26-ம் தேதி வெளியான படம் ராயன். இதில் தனுசுடன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய ஹிட் அடித்த இப்படம் இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
டிரைவ் அவே டால்ஸ் (Drive Away Dolls)
ஈதன் கோயன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வெளியான படம் டிரைவ் அவே டால்ஸ். மார்கரெட் குவாலி, ஜெரால்டின் விஸ்வநாதன், பீனி பெல்ட்ஸ்டீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் இன்று ஜியோ சினிமாவில் வெளியானது.
இன்கம்மிங் (Incoming)
டேவ் செர்னின், ஜான் செர்னின் இயக்கத்தில் மேசன் தேம்ஸ், இசபெல்லா பெரீரா, லோரன் கிரே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படம் இன்கம்மிங். இந்த படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
தி பிராக் (The Frog)
மின்-சி செல், கிம் யூன்-சியோக், லீ ஜங்-யூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கொரியன் சீரிஸ் தி பிராக். இந்த சீரிஸின் முதல் எபிசோடு இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
பாளோ கர் லோ யார் (Follow Kar Lo Yaar)
சந்தீப் குக்ரேஜா இயக்கத்தில் உர்பி ஜாவேத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகி இருக்கும் சீரிஸ் பாளோ கர் லோ யார். இந்த சீரிஸின் முதல் எபிசோடு இன்று பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது.
பச்சிங்கோ சீசன் 2 (Pachinko Season 2)
கோகோணடா, ஜஸ்டின் சோன் ஆகியோர் இயக்கத்தில் பச்சிங்கோ சீசன் 2 உருவாகியுள்ளது. இதன் முதல் எபிசோடு இன்று ஆப்பிள் டிவி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில், கிம் மின்-ஹா, லீ மின்-ஹோ, ஜின் ஹா மற்றும் யூன் யூ-ஜங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.