'ரகு தாத்தா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2024-09-01 11:26 IST

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் இவர் நடித்த 'ரகு தாத்தா' திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கிய இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் இதுவரை ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 13-ந் தேதி ஜி5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்