சிறுமியின் உயிரை காக்க எலும்பு மஜ்ஜை தானம் செய்த முதல் நடிகர்

சல்மான் கானின் தொண்டு அறக்கட்டளை பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

Update: 2024-07-30 06:48 GMT

மும்பை,

பாலிவுட் சினிமாவில் உள்ள முன்னனி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் சினிமா துறைமட்டுமின்றி சமூக நற்பணிகளிலும் அர்ப்பணிப்பு கொண்டவராக திகழ்கிறார். தன்னலமற்ற இவர், தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த 2010-ல் பூஜா என்ற சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு எலும்பு மஜ்ஜை தேவைப்பட்டது. சிறுமியின் உயிரை காக்க அப்போது நடிகர் சல்மான் கான் அவரது கால்பந்து குழுவினரை நன்கொடை அளிக்க ஊக்குவித்தார். இருப்பினும், கடைசி நிமிடத்தில் குழுவினர் பின்வாங்கினர்.

அந்த சமயத்தில் சல்மான் கானும் அவரது சகோதரர் அர்பாஸ் கானும் இணைந்து எலும்பு மஜ்ஜையை தானம் செய்தனர். அதனால் சல்மான் கான் முதன் முதலில் எலும்பு மஜ்ஜை தானம் செய்த இந்திய சினிமா நடிகர் என்று கூறப்படுகிறார்.

அதேசமயம் அவரது தொண்டு அறக்கட்டளை, பொதுமக்களுக்கு ஆதரவு, சுகாதாரம் மற்றம் கல்வி உதவி தொகை வழங்கிவருகிறது. மேலும் அறக்கட்டளையின் முயற்சிகள் மூலம் அறுவைசிகிச்சைகளுக்கு நிதியளிப்பது போன்ற உதவிகளை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்