'அனிமல்' படத்தில் நடித்ததால் எதிர்கொண்ட விமர்சனம் - மனம் திறந்த திரிப்தி டிம்ரி
அனிமல் படம் மூலம் புகழ் பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களையும் திரிப்தி டிம்ரி எதிர்கொண்டிருக்கிறார்.;
சென்னை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிப்தி டிம்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'மாம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு வெளியான 'லைலா மஜ்னு'வில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் கடந்த ஆண்டு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'அனிமல்' படத்தில் திரிப்தி டிம்ரி, சோயா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் புகழ் பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் இது குறித்து திரிப்தி டிம்ரி மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'சோயாவாக எப்படி நடிக்க ஒப்புக்கொண்டேனோ அந்த வழியில்தான் நான் அதில் நடித்திருந்தேன். நல்லது, கெட்டது என மனிதர்களாகிய நம் அனைவருக்கும் வெவ்வேறு சாயல்கள் உள்ளன. எனக்கு எப்போதும் பாதுகாப்பான ஒரு வட்டத்திற்குள் இருக்க பிடிக்காது. வித்தியாசமான பாத்திரங்களைத் தேர்ந்தேடுத்து நடிக்க விரும்புகிறேன். நான் திரைப்படங்களில் இந்த பக்கங்களையும் ஆராய விரும்பினேன், ' என்றார்.