நடன அசைவுகள் - தெலுங்கானா மகளிர் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு

சமீபத்தில் வெளியான சில பாடல்களில் உள்ள நடன அசைவுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன;

Update:2025-03-22 13:35 IST

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான சில பாடல்களில் உள்ள நடன அசைவுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில், 'டாகு மகாராஜ்' படத்தின் 'தபிடி திபிடி பாடலைத் தொடர்ந்து 'ராபின்ஹுட்' படத்தின் 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற லிரிக்கல் வீடியோவில் கெடிகா ஷர்மா ஆடிய நடன அசைவுகள் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

இவ்வாறு தொடர்ந்து நடன அசைவுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தநிலையில், தெலுங்கானா மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிரப்பித்துள்ளது.

அதன்படி, "திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அருவருப்பாக காட்டுவது சரியல்ல. நடன இயக்குனர்கள், பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும், இல்லையெனில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ' என தெலுங்கானா மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்