"நான் செய்த செயலால் இயக்குனர்களுக்கு வந்த சிக்கல்" - மாரி செல்வராஜ் பேச்சு

துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் ’பைசன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.;

Update:2025-03-22 11:34 IST
"The trouble that came to the directors because of what I did" - Mari Selvarajs speech

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.

இதைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் 'பைசன்' படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில், மாமன்னன் படப்பிடிப்பு நடந்த சேலத்தில் படம் எடுத்தால் ஓடாது என்கிறார்கள் என தான் உதயநிதியிடம் அப்போது கூறியதாகவும் அதனால் அவர் தயக்கமடைந்ததாகவும் மாரி செல்வராஜ் கூறி இருக்கிறார். 

சேலம் அரசு கலை கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் பேசிய அவர், 'கதை சொல்லும் விதத்தில் ஒரு மனிதரை மேலே, கீழே என இழிவாக காட்டக்கூடாது என்று நான்செய்த செயல் இன்றைய தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களுக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்