தனது நிறைவேறாத ஆசை குறித்து பேசிய சமந்தா

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார்.;

Update:2025-03-25 06:14 IST

சிட்னி,

கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. 'பானா காத்தாடி' படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த சமந்தா, பின்னர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்போது பாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார்.

அதில் பேசிய அவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரி படிப்புக்குப் பிறகு சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது தனது கனவாக இருந்ததாகவும், ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டதாகவும் உருக்கத்துடன் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்