ஏ.ஆர்.முருகதாஸின் 'சிக்கந்தர்' டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

வருகிற 30-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் 'சிக்கந்தர்' படம் வெளியாக உள்ளது.;

Update:2025-03-22 07:45 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கி வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற 30-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் 'சிக்கந்தர்' படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிக்கந்தர் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்