சிவராஜ்குமார், உபேந்திரா நடிக்கும் '45' பட அப்டேட்

இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்குனராக அறிமுகமாகும் படம் 45;

Update:2025-03-22 10:50 IST
45 starring Shivarajkumar and Upendra

சென்னை,

பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அதன்படி, '45' என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார். இதில், சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 45 படத்தின் டீசரை மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாலை 6.45 மணிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அர்ஜுன் இயக்கத்தில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில் உருவாகும் இப்படம் ஒரு ஆக்சன் காமெடி கதைக்களம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்