ஜான்வி கபூருக்கு 'சிறப்பு' பரிசு கொடுத்த ராம் சரண் மனைவி
ராம் சரணின் மனைவி உபாசனா , ஜான்வி கபூரை சந்தித்து சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இருக்கிறார்.;

சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை தொடர்ந்து, தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
'உப்பெனா' பட இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி ராம் சரண் பிறந்தநாளுக்கு 1 நாள் முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இப்படப்பிடிப்பு இடைவேளையின்போது, ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா, ஜான்வி கபூரைச் சந்தித்து சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இருக்கிறார்.